அகதிகள் சட்டம், பின்னணியும் யதார்த்தங்களும்
தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் 20.11.2026 அன்று DSP மற்றும் SI பயிற்சி அதிகாரிகளுக்காகக் குழு கலந்துரையாடல் (Panel Discussion) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமதி S. வளர்மதி, IAS., வெளிநாடுவாழ் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு, திரு.G. ஷஷாங்க் சாய், IPS., காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர், திரு. சச்சிதானந்த வலன் மைக்கேல், ஐ.நா. அகதிகள் உயர்ஆணையம் (UNHCR), டாக்டர் R.K.ராதாகிருஷ்ணன், கல்வி மற்றும் ஊடகம், டாக்டர் பெர்னார்ட் D’சாமி, லயோலா கல்லூரி, டாக்டர் A.S. விஜிதரன், ஆசிரியர், இயக்குநர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் ஆகியோர் பங்கேற்றனர். இக்குழு விவாதத்திற்கு டாக்டர் K.A. செந்தில் வேலன், IPS., கூடுதல் இயக்குநர், தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகம் அவர்கள் நெறியாளராக வழிநடத்தினார். அகதிகளின் உரிமைகள், அவர்களுக்கான சட்டங்கள், சமூகப் பொருளாதார சூழல்கள் மற்றும் அகதிகளைப் பாதுகாப்பதில் காவல்துறையின் முக்கிய பங்கு குறித்து இக்கலந்துரையாடலில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.











