நில அளவைத் துறை இயக்குநருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிப்பு
சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக மிகச் சிறப்பாக மக்கள் பணியாற்றி, தற்போது சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள மதிப்புக்குரிய தா.கிறிஸ்துராஜ் ஐ.ஏ.எஸ் அவர்களை, அவரது அலுவலகத்தில் திருப்பூரைச் சேர்ந்த முக்கிய நுகர்வோர் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இச்சந்திப்பின் போது, நுகர்வோர் மற்றும் சமூக நலனுக்காகப் பாடுபடும் பின்வரும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்:
ஈ.பி.அ.சரவணன் – தலைவர், திருப்பூர் நுகர்வோர் நல் முன்னேற்ற சங்கம்.
கே.ஏ.கே.பி. கிருஷ்ணசாமி – தலைவர், பனியன் சிட்டி கன்ஸ்யூமர் வெல்ஃபேர் அசோசியேஷன்.
ஜான் சாமுவேல் – தலைவர், புதிய திருப்பூர் சமூக விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்.
இவர்கள் அனைவரும் புதிய இயக்குநருக்குப் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து கொடுத்து தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

